Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி, மே 1: பர்கூர் அடுத்த கணேஷ் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (58). இவர் பர்கூரில் நகை கடை வைத்திருந்தார். கடந்த ஒரு வருடமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த பர்கூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிவண்ணனின் மகன் பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.