Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி, டிச.23: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு 560 மனுக்களை வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித் தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 560 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட டிஆர்ஓ, தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், தனித்துணை கலெக்டர் அபிநயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) சவுமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.