Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 1 மாணவன் மாயம்

கிருஷ்ணகிரி, பிப்.5: கிருஷ்ணகிரி அடுத்த தர்கா கே.என்.நகரைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மகன் சபரி(16). இவர் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி, பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பிற்கு சென்ற சபரி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது, 18ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் பள்ளியில் இருந்து வெளியே வந்த சபரி, ஆவின் மேம்பாலம் அருகே வரை வந்திருப்பதும், அதன் பின்னர் அவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் பூங்காவனம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.