Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓசூர் மாநகராட்சி 37வது வார்டில் வடிகால் வசதியை கமிஷனர் ஆய்வு

ஓசூர், செப்.30: ஓசூர் மாநகராட்சி 37வது வார்டுக்குட்பட்ட சதாசிவ நகர் மற்றும் மஞ்சுநாதா நகரில் உள்ள வடிகால் வசதிகளை ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். தொடர்ந்து மிடிகிரிப்பள்ளி பூங்கா மற்றும் தண்ணீர் தொட்டியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, குறிப்பிடப்பட்ட வேலைகள் மற்றும் தேவைகள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்களிடம் கூறி விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சபீர் முகமது ஆலம் கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழுவின் தலைவர் சென்னீரப்பா மற்றும் நகராட்சி அலுவலர்கள்

உடனிருந்தனர்.