தேன்கனிக்கோட்டை, நவ.2: கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பட்டி சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் அனாதையாக கார் ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், அங்கு விரைந்து சென்ற தளி போலீஸ் எஸ்ஐ மாயக்கண்ணன் தலைமையிலான போலீசார் அந்த காரில் சோதனை நடத்தினர்.
அப்போது அதில் இரும்பு வெட்டும் கருவிகள், 2 கத்திகள், முகமூடி தொப்பிகள் போன்றவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காருடன் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காரில் வந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தை நடத்த முயன்ற தப்பி இருக்கக்கூடும் என்பது தெரியவந்து உள்ளது. காரை பறிமுதல் செய்து கார் யாருடைது ? அதில் ஆயுதங்கள் எதற்காக எடுத்து செல்லப்பட்டது என்பது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3


