Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிணற்றில் முதியவர் சடலம்கிணற்றில் முதியவர் சடலம்

வடலூர், மார்ச் 4: வடலூர் பார்வதிபுரம் சவேரியார் நகர் பகுதியை சேர்ந்த சூசைநாதன் மகன் இருதயராஜ்(57). திருமணம் ஆகாத இவர் உடல்நிலை மற்றும் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவர், கடந்த 1ம் தேதியில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இவர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. தகவலறிந்த வடலூர் போலீசார் சென்று குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் உதவியுடன், சடலத்தை கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து இருதயராஜ் தாயார் ஜெசிந்தா(76), வடலூர் காவல் நிலையத்தில் கொடுக்க புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.