Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

ஓசூர், செப்.30: ஓசூர் மாநகராட்சி 25வது வார்டில் டெங்கு ஒழிப்பு, சிறப்பு தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் துப்புரவு ஆய்வாளர் உதயகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ், மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் ஓசூர் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பொருட்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும்.

மழைநீர் தேங்காமல் தடுத்தல். வீடுகளை மற்றுமின்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், பொது மக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து, மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். மருந்து கடைகளில் தாமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.