Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

கிருஷ்ணகிரி, ஜூலை 30: கிருஷ்ணகிரி மாவட்டம். உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் வசித்து வருபவர் முத்தாச்சாரி. இவரது மனைவி பத்மா (51). இவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த உறவினரான ராஜகோபால் என்பவருடன், நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில், பத்மா டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் சாலை ஏ.புதூர் என்ற இடத்தில் சென்றபோது ராஜகோபால் வேகமாக சென்றுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக, பத்மா டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் நேற்று காலை உயிரிழந்தார். இதுபற்றி கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.