Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாலிபர் மர்மச்சாவு

ஓசூர், அக்.29: ஓசூர் அருகே வாகனங்கள் வாங்கி விற்கும் தரகர் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அந்திவாடி ஸ்டேடியம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுபற்றி மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், சடலமாக கிடந்தவர் ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார்(37) என்பதும், டூவீலர்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது தலையில் காயங்கள் இருந்தது.

இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரவீன்குமார் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை தலையில் தாக்கி கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சடலம் மீட்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.