Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பருவ மழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் வெப்பாலம்பட்டி ஏரி உழவு பணிகள் பாதிப்பு

ராயக்கோட்டை, ஜூலை 29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக மண் ஈரப்பதம் கொண்ட பகுதிகளாக ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் ராயக்கோட்டை இருந்து வருகிறது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கும் தண்ணீரால் போச்சம்பள்ளி வரை விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்கின்றனர். கடந்த ஆண்டுகளில் அனத்து பயிர்களின் விளைச்சல் அதிகமாக இருந்தன. ஆனால், நடப்பாண்டில் எதிர்பார்த்த படி பருவ மழை பெய்யவில்லை. எல் நினோ தாக்கத்தால் பருவ மழை பொய்த்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பூக்கள் உள்ளிட்ட பயிர் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தன. இதனால் ராயக்கோட்டையில் பல நீர்நிலைகள் நீரிண்றி வறண்டு வருகிறது.

மேலும் நீர்மட்டம் குறைந்து ஏரிகள் காய்ந்து வருகிறது. இதில் கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதன் காரணமாக விவசாய சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால், காசு கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  பயிர்கள் காய்ந்து வந்தாலும் இருக்கும் பயிர்களை காக்க விவசாயிகள் காசு கொடுத்து வண்டிகளில் தண்ணீர் வாங்கி விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.  தற்போது, ராயக்கோட்டை அடுத்த வெப்பாலம்பட்டி ஏரியில், தண்ணீர் இல்லாததால் காய்ந்து வறண்டு கிடக்கிறது. அதனால் ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்ய வழியின்றி தரிசாக மாறி வருகிறது.