Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓசூர் அருகே காலாவதியான கேக் விற்ற பேக்கரிக்கு சீல்; உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி

ஓசூர், அக்.28: ஓசூர் அருகே காலாவதியான கேக் விற்பனை செய்த பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் தனியார் பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் காலாவதியான கேக் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில், ஓசூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள், ஆய்வு செய்தனர். ஆய்வில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் சுமார் 15 கிலோ இருந்ததை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதையடுத்து, பேக்கரி உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், நோட்டீஸ் வழங்கி பேக்கரியை பூட்டி சீலிட்ட அதிகாரிகள், 3 நாட்களுக்குள் காலாவதியான உணவு பொருட்களை அகற்றிவிட்டு சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து, உணவுத்துறையினரின் ஆய்விற்கு பிறகு பேக்கரியை திறக்க அறிவுறுத்தினர். ஓசூர் மாநகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், உணவு பாதுகாப்பு சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.