கிருஷ்ணகிரி, செப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி கங்கமடுவு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். கடந்த 25ம் தேதி வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேப்பனஹள்ளி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி கடையில் பணியாற்றி வரும் நந்தீஸ்(19) என்பவர், ஆசை வார்த்தை கூறி தங்களது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டுத் தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement


