Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை

வேப்பனஹள்ளி, ஜூலை 28: வேப்பனஹள்ளி சுற்றியுள்ள பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிக விளைச்சல் காரணமாகவும், ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளியை வேப்பனஹள்ளிக்கு கொண்டு வந்து கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக வேப்பனஹள்ளி பகுதியில் விளைவிக்கப்படும் தக்காளியை அறுவடை செய்யும் கூலிக்கூட கட்டுப்படி ஆகாத காரணத்தினால், விவசாயிகள் பலர் தக்காளியை அறுவடை செய்யாமல், செடியிலேயே விட்டுள்ளனர். தொடர்ந்து தக்காளி விலை சரிந்து வருவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.