Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெண்ணை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 26: கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பாணக்கார தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி மாரி (49). இவர் வீடு, வீடாக சென்று பேன்சி பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரபாகாரன், கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு சென்ற மாரி, தகராறில் ஈடுபட்ட பிரபாகரனை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, உன்னால் தான் எங்களுக்குள் சண்டையே வருகிறது என கூறிய பிரபாகரன், திடீரென மாரியை கை மற்றும் அங்கிருந்த செங்கலை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த மாரி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.