Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ராயக்கோட்டையில் காலிபிளவர் அமோக விளைச்சல் கிலோ ரூ.35க்கு விற்பனை

ராயக்கோட்டை, செப்.21: ராயக்கோட்டை பகுதியில் காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளது. கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆங்கில வகை காய்கறியான காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், அண்டைய மாநிலங்களான கேரளம், புதுச்சேரிக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

காலிபிளவரை பொறுத்தவரை 40 எண்ணிக்கை கொண்ட ஒரு மூட்டை, ராயக்கோட்டை மார்க்கெட்டில் ரூ.400 வரை விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஒரு காலிபிளவர் ரூ.20க்கு வாங்கிச் செல்கின்றனர். சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்கின்றனர்.