Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் 8 இடங்களில் நடக்கிறது

கிருஷ்ணகிரி, செப்.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (19ம் தேதி) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் 8 இடங்களில் நடத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் பழையபேயனப்பள்ளி, ஓசூர்-கொலதாசபுரம், போச்சம்பள்ளி- மல்லிக்கல், ஊத்தங்கரை- பனமரத்துப்பட்டி, பர்கூர் -கொண்டப்பநாயனப்பள்ளி, சூளகிரி- ஏனுசோனை, தேன்கனிக்கோட்டை - கொரட்டகிரி, அஞ்செட்டி- சித்தாண்டாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.