Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓசூரில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

ஓசூர், செப்.18: ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலங்களுக்கு இணையாக பல லட்சம் மதிப்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, அதற்கான வடிவமைப்பாளர்கள் அழைத்து வந்து சிலைகள் மற்றும் அரங்குகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வருடமும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று பாகலூரில் வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது மேளதாளங்களுடன் வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி, நீர்நிலைகளுக்கு கொண்டு சென்றனர். பாகலூர், பேரிகை, சூளகிரி, மத்திகிரி, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்பட்டன. இதற்காக சிப்காட், நல்லூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, மத்திகிரி ஆகிய காவல் நிலைய போலீசார், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.