Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குரூப் 2, 2ஏ முதல்நிலை போட்டி

தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகிருஷ்ணகிரி, ஆக. 18: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 20ம் தேதி முதல் நடைபெறுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2026ம் ஆண்டு திட்ட நிரலின்படி, உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் நிலை 2 மற்றும் முதுநிலை ஆய்வாளர் ஆகிய 821 பதவிகளை உள்ளடக்கிய குரூப் 2 மற்றும் 2 ஏ போட்டித் தேர்விற்கான அறிவிப்பினை தமிழக அரசு சார்பில் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சிறுதேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இவ்வலுவலகத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, பயிலக வசதி, இலவச வை-பை மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்பெறம் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.

எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.