கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே காடுகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(61). கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி, தோட்டத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணமூர்த்தி, மீண்டும் திரும்பவில்ல. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தோட்ட உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
