Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய அணைகளாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு அணை ஆகியவை விளங்கி வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் மூலம் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இந்த அணையில் இருந்து வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில், முதல்போக பாசனத்ற்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.