Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போச்சம்பள்ளி அருகே மேம்பாலம் அமைக்க கோரி சாலை மறியல்

போச்சம்பள்ளி, அக்.17: போச்சம்பள்ளி அருகே, விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்தவர் விமல்(30). இவர் ஓசூரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது சொந்த ஊருக்கு செல்ல ஓசூர் அடுத்த கண்ணன்டஹள்ளி கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், எதிர்பாராத விதமாக, கூட்ரோட்டில் உள்ள ரவுண்டானா சுற்றுசுவரில் மோதி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு காயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள், மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், கிராம மக்கள் கண்ணன்டஹள்ளி கூட்ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது பெரியதாக உள்ள ரவுண்டானாவை சிறியதாக்க வேண்டும் எனக்கூறி நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.