கிருஷ்ணகிரி, செப்.17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில், கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செட்டியம்பட்டி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
அதன் பின், சுமார் 2.30 மணி நேரமாக மின்விநியோகம் செய்யப்படவில்லை. அதிகாலை சுமார் 3 மணியளவில் தான் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கொசு தொல்லையால் தூக்கமின்றி அவதிக்குள்ளாகினர். இதுபோன்று தொடர்ச்சியாக மின் தடை ஏற்படாமல் தடுக்க, மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


