ஓசூர், ஆக. 17: ஓசூரில் இன்று(17ம் தேதி) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் 92வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பிரகாஷ் ெவளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பாக, கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அலுவலகத்தில் இன்று (17ம் தேதி) காலை 9 மணியளவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
அது சமயம் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



