Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.17: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநில தலைவர் சக்திவேல், பொதுச்செயலாளர் வளர்மதி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை உருவாக்காமல், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செவிலியர் பணியிடங்களை, முன் அறிவிப்பின்றி பணிநிரவல் செய்யும் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. புதிய பணியிடங்களை உருவாக்காமல், ஏற்கனவே உள்ள இடங்களை மாற்றி அமைக்கும், பணி நிரவல் ஆணையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவும், செவிலியர் போதகர் நியமனம் ஏற்கனவே அரசின் நடைமுறைப்படி, நிரந்தர பணியிடங்களாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். செவிலியர் அலுவலர் என பெயர் மாற்றம் செய்து செவிலியர்களுக்கான பணி வரன்முறை செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பட்டை அணிந்து பணி புரியும் போராட்டம், காலை நேர குரல் முழக்க போராட்டங்கள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், அதிகாரிகளை சந்தித்து செவிலியர்களின் கோரிக்கை குறித்து பேசியபோது, அரசு தரப்பில் இருந்து எங்களது கோரிக்கைகளுக்கு உறுதியான உத்தரவாதமும், உரிய நேரத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் வழங்கப்படவில்லை.