Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போச்சம்பள்ளியில் ரூ.41.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

போச்சம்பள்ளி, அக்.15: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. அதிகபட்சமாக கிலோ ரூ.154க்கும், குறைந்தபட்சமாக ரூ.60.99க்கும், சராசரியாக ரூ.148க்கும் விற்பனையானது. 185 விவசாயிகள் கொண்டு வந்த 28,888 கிலோ கொப்பரை ரூ.41,53,170க்கு விற்பனையானது. இதேபோல், ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியிலிருந்து 41 விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்தனர். ஏலத்தில் அதிகபட்சம் கிலோ ரூ.153க்கும், குறைந்தபட்சமாக ரூ.111.42க்கும், சராசரியாக ரூ.150க்கும் விற்பனையானது. மொத்தம் 2,551 கிலோ கொப்பரை ரூ.3,63,069க்கு ஏலம்போனது.

விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜா கூறுகையில், `கொப்பரை, பருத்தி, தேசிய மின்னணு வேளாண் சந்தை முறையில் விற்பனை செய்யப்படுகிறது, இதன்மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு கூடுதல் விலை பெற்று பயனடையலாம். நடப்பு பருவத்தில் நெல், மஞ்சள், பருத்தி ஏலமும் நடைபெற இருப்பதால், விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து கூடுதல் வருவாய் பெற்று பயனடையலாம்,’ என்றார்.