ஊத்தங்கரை, அக்.14: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள புளியானூர் கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களால் ‘கரியன்’ என்ற கோயில் காளை வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயில் காளையை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காணவில்லை. எருதுவிடும் விழாவில் பங்கேற்பதற்காக, ஊரை சேர்ந்த இளைஞர்கள் கரியனுக்குப் பயிற்சி அளித்து வந்தனர். பொங்கல் பண்டிகை காலங்களில் நடைபெறும் எருதுவிடும் விழாக்களில் பங்கேற்று வந்த கரியன், காணாமல் போனது குறித்து கிராம மக்கள் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் காளையை தேடி வருகின்றனர்.
+
Advertisement


