Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் அருகே தடுப்பு சுவர் மீது மோதி கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது

ஓசூர், மே 14: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மினி கண்டெய்னர் லாரி, சிப்காட் பகுதியில் உள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு பார்சல் எடுத்துசென்று விட்டு மீண்டும் ஓசூர் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது சிப்காட் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது, மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த சிப்காட் போலீசார் விரைந்து சென்று விபத்திற்குள்ளான கண்டெய்னர் லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். பின்னர் போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர்.