Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய நிலத்தில் முதியவர் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி, மே 14: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அதனைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர் தனக்கோடிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், கந்திக்குப்பம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், சம்பவ இடம் வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்டவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.