Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கஞ்சா விற்பனை செய்த 2 பெயிண்டர்கள் கைது

ஓசூர், மே 12: சூளகிரி அருகே, கஞ்சா விற்ற பெயிண்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து, 10 கிலோ கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பட்டகுருபரப்பள்ளி பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு கல்குவாரி அருகே, 2 இளைஞர்கள் டூவீலருடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றி வளைத்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனை செய்த போது, அதில் பண்டல், பண்டலாக கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர்கள் கொட்டங்கரை கிராமத்தைச் சேர்ந்த முருகேஷ் (25), மாதேஷ் (24) என்பதும், ஓசூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் கனரக மோட்டார் வாகனத் தொழிற்சாலையில், பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், வேலை நேரத்திற்குப் பிறகு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சா மற்றும் 2 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.