Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஊத்தங்கரை கேக் ஷாப்பில் கஞ்சா சாக்லேட் சாப்பிட்ட பெண் ஊழியர் மயக்கம் ஸ்வீட் மாஸ்டர் அதிரடி கைது

ஊத்தங்கரை, செப்.11: ஊத்தங்கரை நகரில் உள்ள கேக் ஷாப்பில் வேலை செய்யும் ஸ்வீட் மாஸ்டர் கொடுத்த கஞ்சா சாக்லேட்டை சாப்பிட்ட பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து, ஸ்வீட் மாஸ்டரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்து(28). இவர் ஊத்தங்கரை நகரில் உள்ள கேக் ஷாப்பில், 3 ஆண்டுகளாக ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அதே கடையில் மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்த செல்வி(30) என்பவர், கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கஞ்சா கலந்து விற்பனை செய்யப்படும் பாங்கு பாலை ஆன்லைனில் வாங்கி, தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 8ம் தேதி வேலைக்கு வந்த செல்விக்கு, முத்து கஞ்சா சாக்லேட்டை கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட செல்வி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் பணியாற்றியவர்கள், அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த செல்வி கொடுத்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பெண் ஊழியருக்கு கஞ்சா சாக்லேட் கொடுத்த முத்துவை கைது செய்த போலீசார், அவருக்கு யாரிடம் இருந்து கஞ்சா சாக்ேலட் கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.