Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குப்பைகளை சேகரிக்க ரூ.8.35 லட்சத்தில் வாகனம்

போச்சம்பள்ளி, ஜூன் 11: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் குப்பை அள்ளும் வாகனம் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15வது நிதி ஆணைய மானியம் 2025-26 ஆண்டின் முதல் தவணை நிதியின் கீழ், ரூ.8.35 லட்சத்தில் புதிய குப்பை அள்ளும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்திற்கு பூஜை செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்து பேசினார்.

மாவட்ட திமுக அமைப்புசாரா தொழிலாளரணி துணைத்தலைவர் செந்தில்குமார் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாரி, கவுன்சிலர் சோபன்பாபு, தலைமை எழுத்தர் வெங்கடாசலம், சமரசம், பாஸ்கர், சிற்றரசன், பசவராஜ் மற்றும் சபரி, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய வாகனம் மூலம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை கழிவுகள் விரைவாக சேகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.