Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓடும் லாரியில் பயங்கர தீ

ஓசூர், அக்.10: ஓசூர் அருகே, தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்தது. நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி, முருங்கைக்காய் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி ஒன்று, ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி பகுதியில், புதிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, லாரியின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. வெயிலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக, தீ லாரியின் முன்பகுதி முழுவதும் மிக வேகமாகப் பரவி எரியத் தொடங்கியது. தீப்பற்றியதை உடனடியாகக் கவனித்த லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.

சாலையில் லாரி தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பக்கெட் மற்றும் குடங்களில், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ தீவிரமாகப் பரவியதால் அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த சிமெண்ட் கான்கிரீட் கலவை இயந்திரத்தில் இருந்த தண்ணீரைக் கொண்டு போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அதற்குள் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.