போச்சம்பள்ளி, ஆக. 10: மத்தூரில் 3ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா கோலாகலமாக நடந்தது.
மத்தூரில் 3ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதனை மத்தூர் வட்டார இயற்கை விவசாய நலச்சங்கம், பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது. ஐசிஏஆர் வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தரராஜ் நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
வேளாண்மை துணை இயக்குநர் உமா, திமுக ஒன்றிய செயலாளர் இந்த விழாவில் மரபு வழி நெல் மற்றும் காய்கறி விதைகளை பாதுகாத்து வரும் ஏராளமான வேளாண் விவசாயிகள் நேரில் பங்கேற்று, தங்களிடம் உள்ள விதைகளை காட்சிப்படுத்தினர். விதை தேவைப்படும் விவசாயிகள், தங்களுக்கு வேண்டிய ரகங்களை விலை கொடுத்து வாங்கி சென்றனர். மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பொதுமக்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு விதமான விற்பனை மற்றும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது.



