Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

6.83 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு

கிருஷ்ணகிரி, ஆக. 10: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 6.83 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று (10ம் தேதி) வழங்கப்பட உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்று (10ம் தேதி) மற்றும் விடுபட்ட குழந்தைகளுக்கான முகாம், வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாம்களில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள், கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 5,32,947 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1,50,255 பெண்களுக்கும் என மொத்தம் 6 லட்சத்து 83 ஆயிரத்து 202 பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில், இம்முகாமிற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1796 அங்கன்வாடி மையங்கள், 270 துணை சுகாதார நிலையங்கள், 61 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியதாவது: உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர், மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழித்தால் கூட, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை, கால்கள் படுவதன் மூலம், மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது. குடற்புழு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் இருக்காது. கடுமையான தொற்று உள்ளவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பலவீனம், பசியின்மை ஏற்படும்.