Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெண் உள்பட 2 பேர் குண்டாசில் கைது

கிருஷ்ணகிரி, அக்.9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பாலினம் கண்டறிந்து கூறுபவர்கள், கருக்கலைப்பு செய்பவர்கள் மற்றும் போலி டாக்டர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் கடந்த மாதம் பேவநத்தம் துணை சுகாதார நிலைய செவிலியர் கிருத்திகா மற்றும் 4 கர்ப்பிணிகளை அழைத்து கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் சோதனை நடத்தினர். அப்போது, போச்சம்பள்ளியை சேர்ந்த எஸ்தர் (32) என்பவர் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறுவது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த மாதம் 12ம் தேதி, அவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், ராயக்கோட்டை தனியார் திருமண மண்டபம் பின்புறம் வசிக்கும் கிருத்திகா என்பவருக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூற வேண்டும் என்றனர். அதற்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கூறிய எஸ்தர், சிறிது நேரத்தில் கிருத்திகா வீட்டிற்கு காரில் வந்தார். அவருடன் திருப்பூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி(30) என்பவரும் வந்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், எஸ்தர் மருத்துவம் படிக்காமலேயே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஸ்கேன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், இருவரையும் போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கைதான 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி அனிதா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் தினேஷ்குமார் கைதான எஸ்தர், குருமூர்த்தி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். இதற்கான நகலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள திருமூர்த்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதே போல் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எஸ்தர், வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.