Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு

போச்சம்பள்ளி, செப்.9: கிருஷண்கிரி மாவட்டத்தில் எல்நீனோ தாக்கத்தால் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருவதால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து, விலை ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. எல்நீனோ தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு சுட்டெரித்து வருகிறது. இதனால் சிறுவர் முதல் பெரயிவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய வேளையில் சாலைகளில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டுகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தங்களை காத்துகொள்ள பழ ஜூஸ்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். குறிப்பாக எலுமிச்சை சாறுகளை அதிகம் நாடி வருகிறார்கள். இதனால் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை வரத்து குறைந்துள்ளது. அதேசமயம் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை சில்லரை விற்பனையில் எலுமிச்சை ரூ.5 முதல் ரூ. 7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்து தேவை அதிகரித்ததால் எலுமிச்சை விலை ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தால் எலுமிச்சை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.