Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்சாரம் பாய்ந்து

வாலிபர் பலிஊத்தங்கரை, மே 9: ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி தோட்டக்காரன் கொட்டாயைச் சேர்ந்தவர் வேடி, விவசாயி. இவரது மகன் சூர்யா (24). நேற்று மதியம் அவர்களது தோட்டத்தில் உள்ள பனைமரத்தில் இரும்பு கொக்கியால் நுங்கு பறித்து கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பனை மரத்தின் அருகே இருந்த மின் கம்பியின் மீது இரும்பு கொக்கி பட்டதில், மின்சாரம் பாய்ந்து சூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காரப்பேட்டை போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.