Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ராயக்கோட்டையில் பூத்து குலுங்கும் சாமந்தி

ராயக்கோட்டை, அக்.8: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் காய்கறிகள் மற்றும் பூக்கள் சாகுபடி பிரதானம். கர்நாடகா மற்றும் மாநில எல்லையான ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் மண் வளம் ஈரப்பதம் நிறைந்து காணப்படுகிறது. இதனால், காய்கறி சாகுபடிக்கு அடுத்தப்படியாக பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பட்டன் ரோஸ், மல்லிகை, அரளி மற்றும் சாமந்தி பூக்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

பூக்கள் விற்பனைக்காக ராயக்கோட்டையில் பிரத்யேக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரள வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். ராயக்கோட்டை அடுத்த பாலிகானூர் கொட்டாயில் தற்போது சாமந்தி பூத்து குலுங்குகிறது. அவற்றை பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.