Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதிய கல்குவாரி அமைக்க பனைமரங்கள் வெட்டி அழிப்பு

கிருஷ்ணகிரி, செப். 8: போச்சம்பள்ளி அருகே, புதிய கல்குவாரி அமைக்க நீர்வழிப்பாதை மற்றும் பனை மரங்களை வெட்டி அழிப்பதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தவெக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில், தொப்படிகுப்பம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: போச்சம்பள்ளி தாலுகா, தொப்படிகுப்பம் கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராம பகுதியில் ஏற்கனவே 4 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக கல்குவாரி அமைக்க விண்ணப்பித்து விட்டு, அனுமதி கிடைப்பதற்கு முன்பே பாறைகள் உடைத்துள்ளனர்.

மேலும், குவாரிக்கு செல்லும் வழிக்காக, மழைக்காலங்களில் அருகில் உள்ள மலையில் இருந்து தண்ணீர் வரும் நீர்வழிப்பாதையை அடைத்தும், அங்கிருந்த பனை, தென்னை மரங்களை வேருடன் அகற்றியும், கால்வாயில் வீசி மூடி உள்ளனர். இதே போல், 15 அடிக்கு மேல் மண் எடுக்கப்பட்டதால், தண்ணீர் ஊற்றே வந்து விட்டது. புதிய கல்குவாரி அமைக்க நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு, மரங்கள் வெட்டி அழித்தது குறித்து புகாரளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கல்குவாரி மற்றும் கல் உடைக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், காவேரிப்பட்டணம் விஎஸ்கே நகரில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்துள்ள மனுவில், `வாடகை வீட்டில் வசித்து கொண்டு, கூலி வேலைக்கு சென்று வருகிறோம். எங்களது வருமானம் குழந்தைகளின் கல்வி, வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு போதுமானதாக உள்ளது. சொந்த வீடு கனவாகவே உள்ளது. எனவே, எங்களுக்கு அரசின் திட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி, வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டித் தர வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.