Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பயிர்களை சேதப்படுத்தி காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

ஓசூர், செப்.8: ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில், காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்ைத கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் ஓகுர், சூளகிரி, சானமாவு, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், காட்டு பன்றிகள் விளைநிலங்களில் புகுவதை தடுக்க சிலர், வெடிகள் வைத்து விடுகின்றனர். இதில் நாய்கள், பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அபாயத்தில் சிக்குகின்றன.

நேற்று முன்தினம், நாட்டு வெடி வெடித்ததில், மாடு ஒன்று முகம் சிதைந்தது. மேலும், நாய் ஒன்று உயிரிழந்தது. மேலும், இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் பன்றிக் கூட்டங்கள், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ராகி, தக்காளி, முட்டைக்கோஸ் உள்ளிட்டவற்றை நாசப்படுத்தி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `ஓசூர் வனக்கோட்டத்தில், தற்போது காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பன்றிகள், வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இரவு நேரங்களில், சாலைகளில் கூட்டமாக சுற்றி திரிந்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், விளைநிலங்களுக்குள் பன்றிகள் புகாதவாறு சோலார் வேலி அமைக்கவும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.