Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போச்சம்பள்ளி பகுதியில் புழுதி காற்றால் வாகன ஓட்டிகள் அவதி

போச்சம்பள்ளி, ஜூலை 8: போச்சம்பள்ளி பகுதியில் ஆடி மாதம் பிறக்கும் முன்பே, அதிகளவில் காற்று வீசி வருவதால் மண் பறந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆடி மாதம் பிறப்புக்கு இன்னும் 10 நாட்கள் உள்ளது. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். ஆனால், தற்போது ஆடி மாதம் பிறக்காத நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயங்கார காற்று வீசி வருகிறது. சாலையில் செல்வோர் கண்களில், காற்றில் பறந்து வரும் மண்ணால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் காற்றுக்கு, மரங்களில் உள்ள சிறு கிளைகள் முறிந்து கீழே விழுந்து வருகிறது.

ஆடி மாதம் காற்று அடித்தால், அம்மிக்கல்லே காற்றில் பறக்கும் என்று பழ மொழியாக உள்ள நிலையில், தற்போது அடிக்கும் காற்றுக்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.