Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு கை கொடுக்கும் தேங்காய் சிரட்டை வர்த்தகம்

போச்சம்பள்ளி, செப்.7: தேங்காய் விலையை தொடர்ந்து, போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தேங்காய் சிரட்டை வர்த்தகம் கை கொடுத்து வரும் நிலையில், வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப்படுகை மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 40 லட்சம் மரங்கள் மூலம் ஆண்டுக்கு 5 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தென்னை விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தேங்காய் மண்டிகள், துடைப்பம், கொப்பரை, தென்னை நார், சிரட்டை, கயிறு திரிக்கும் நார் தொழிற்சாலை உள்ளிட்ட சார்பு தொழில்கள் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

தேங்காய் கொப்பரையை பிரித்தெடுத்த பின்பு கிடைக்கும் சிரட்டையை(கொட்டாங்குச்சி) கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பும் தொழிலில் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த காலங்களில் சிரட்டைகளை மெருகூட்டி விற்பனை செய்த நிலையில் தற்போது ஆட்கள் பற்றாகுறையால் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்க மாநில தலைவர் சிவகுரு கூறுகையில்,`தினசரி 4,000 முதல் 5,000 தேங்காய்கள் வெட்டி எடுக்கப்பட்டு, சிரட்டைகளை 200, 250, 300 மில்லி கொள்ளளவாக தரம் பிரித்து கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். அங்கு ஒரு கிலோ சிரட்டை ரூ.35 முதல் ரூ.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.

அங்கு தரமான சிரட்டைகளை சுத்தமாக்கி 50, 100 எண்ணிக்கையில் பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். வெளிநாடுகளில் சிரட்டையில் ஐஸ்கிரீம் மற்றும் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, சந்தை வழிகாட்டுதல் மற்றும் மானியத்துடன் கடனுதவி, சிரட்டையை மெருகூட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்க அரசு முன் வரவேண்டும்,’ என்றார்.