கிருஷ்ணகிரி, செப்.7: டிஎன்பிஎஸ்சி குரூப்-2,2ஏ பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 9ம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப்-2, 2ஏ பதவியில் காலியாக உள்ள 780 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் 11ம் தேதி வௌியிட்டது. குரூப்-2 பதவியில் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, சிறை அலுவலர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட 14 வகையான பதவிகளில் மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் உள்ளது.
குரூப்-2ஏ பதவிகளில் முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்திறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கிரேடு-2, பேரூராட்சி செயல் அலுவலர் நிலை-2, இளநிலை கணக்கர், ஆண் காப்பாளர் உள்ளிட்ட 44 வகையான பதவிகளில் மொத்தம் 780 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி பிறசேர்க்கையில் குரூப்-2 பதவியில் 2 பணியிடங்கள், குரூப்-2 ஏ பதவியில் 23 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-2,2ஏ பதவிகளில் மொத்தமாக 846 காலியிடங்கள் உள்ளது.
சமூகவியல், வணிகவியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை குற்றவியல் மற்றும் குற்றநீதி நிர்வாகம், கணினி பயன்பாடு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை தேர்ச்சி, சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு நவம்பர் 1ம் தேதி நடைபெறும். போட்டித்தேர்வர்கள் ஆன்லைனில் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


