Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கருத்தடைக்கு பின் தெருநாய்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

ஓசூர், ஜூலை 6: தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்ட பிறகு, அவைகளை பிடித்த அதே இடங்களில் முறையாக மீண்டும் விடப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகருக்கு உட்பட்ட ஆனந்த் நகரில், நாய்களுக்கான ஏபிசி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், பிடிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சை மற்றும் கருத்தடை செய்யப்படுகிறது. இதன் பின், அவைகளை பிடித்த இடங்களில் மீண்டும் விட வேண்டும். ஆனால், அவ்வாறு மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏன் என்றால், சமீப காலமாக ஆனந்த் நகர், சின்ன எலசகிரி, பாலாஜி நகர் மற்றும் ஆர்.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதியதாகவும், வளர்ந்த தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இதனால், வேறு பகுதிகளில் இருந்து நாய்கள் இங்கு கொண்டு வந்து விடப்படுகிறதோ என்ற ஐயம் மக்களிடம் எழுந்துள்ளது. நாளுக்கு, நாள் தெருநாய்கள் கூட்டம் கூடி வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, ஏபிசி மையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்களின் சந்தேகத்தை போக்கவும், நிர்வாக வசதிக்காகவும், இந்த ஏபிசி மையத்தை மத்திகிரி கால்நடை மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை