Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

61 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

கிருஷ்ணகிரி, மே 6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட 79 வேட்பாளர்களில் 61 பேர் டெபாசிட் இழந்தனர். தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஊத்தங்கரை(தனி), கிருஷ்ணகிரி தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது, பர்கூர், ஓசூர் தொகுதிகளில் அதிமுகவும், வேப்பனஹள்ளியில் திமுகவும், தளியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றது. மாவட்டத்தில் 6 தொகுதிகளில் மொத்தம் 79 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட்ட 13 பேரில் தவெக வேட்பாளர் இளையராஜா, அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வம், காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமி ஆகியோர் டெபாசிட் பெற்றனர். மற்ற 10 பேரும் டெபாசிட் இழந்தனர்.

இதேபோல், பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட 15 பேரில் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசன், தவெக வேட்பாளர் முரளிதரன், திமுக வேட்பாளர் மதியழகன் ஆகியோர் டெபாசிட் பெற்றனர். மற்ற 12 பேரும் டெபாசிட் இழந்தனர். கிருஷ்ணகிரி தொகுதியை பொறுத்தவரை 15 பேர் களம் கண்டனர். இவர்களில் தவெக முகுந்தன், அதிமுக அசோக்குமார், காங்கிரஸ் செல்லக்குமார் ஆகியோர் டெபாசிட் பெற்றனர். மற்ற 12 பேரும் டெபாசிட் இழந்தனர். வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட 13 பேரில் திமுக சீனிவாசன், அதிமுக கே.பி.முனுசாமி, தவெக சம்பங்கி ஆகிய 3 பேரும் டெபாசிட் பெற்றனர். மற்ற 10 பேரும் டெபாசிட் இழந்தனர்.

ஓசூரில் போட்டியிட்ட 13 பேரில், அதிமுக பாலகிருஷ்ணாரெட்டி, தவெக வடிவேல், திமுக சத்யா ஆகிய 3 பேரும் டெபாசிட் பெற்றனர். மற்ற 10 பேரும் டெபாசிட் இழந்தனர். தளி தொகுதியில் போட்டியிட்ட 10 பேரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன், பாஜ நாகேஷ்குமார், தவெக சுரேஷ் ஆகிய 3 பேரும் டெபாசிட் பெற்றனர். 7 பேர் டெபாசிட் இழந்தனர். 6 தொகுதிகளிலும் போட்டியிட்ட 79 பேரில் 61 பேர் டெபாசிட் இழந்தனர்.