போச்சம்பள்ளி, நவ. 5: உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, போச்சம்பள்ளி காவல் துறை சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வ ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
எஸ்.ஐ. விஜய், உளவுத்துறை தலைமை காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் புருசோத்தமன் வரவேற்றார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி சென்றனர். பள்ளியில் துவங்கிய பேரணி அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலம், காவல் நிலையம் நான்கு சந்திப்பு சாலை, பேருந்து நிலையம் வழியாக ராசி நகர் சென்றும் மீண்டும் பள்ளியை அடைந்தது.
காவேரிப்பட்டணம் ஒன்றியம், வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி., திவ்யா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். உளவுத்துறை காவலர் மூர்த்தி வரவேற்றார். மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


