Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மத்தூர் சுற்று வட்டார பகுதியில் நடப்பாண்டு நெல் சாகுபடி குறைவு

போச்சம்பள்ளி, ஆக. 5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று பாசன மூலம் நேரடியாக 26 ஆயிரத்து 924 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கால்வாய் இணைப்புகள் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பரவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தென்பெண்ணை பாய்ந்தோடும் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், பண்ணந்தூர், வாடமங்கலம், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை முதல் போக சாகுபடிக்கான பணிகள் விவசாயிகள் தீவிரப்படுத்தி இருந்தனர். இதற்காக வரப்புகளை சீரமைத்தல், நிலத்தை சமன்படுத்துதல், நாற்றுகளை சேகரித்தல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதல் போக சாகுப்படிக்கான பட்டம் தொடங்கியதையடுத்து, விவசாயிகள் நாற்று நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.