Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஊத்தங்கரை அருகே புயலால் சேதமடைந்து காணப்படும் தடுப்பணை; சீரமைக்க வலியுறுத்தல்

ஊத்தங்கரை, நவ.3: புயலால் சேதமடைந்த சோளக்காப்பட்டி தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெங்கடத்தாம்பட்டி ஊராட்சி, சோளக்காப்பட்டியில் உள்ள கோத்தியாடம்பள்ளம் ஏரி தடுப்பணை, கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பெய்த பெஞ்சல் புயலால் சேதமடைந்தது. இதனால், அப்பகுதி விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த தடுப்பணை சோளக்காப்பட்டி, புதூர், படப்பள்ளி, பட்டக்கானூர், வெங்கடத்தாம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வந்தது. தடுப்பணை உடைந்ததால், நீர் முழுவதும் வெளியேறி, தற்போது வறண்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக, சுற்றுவட்டார விவசாய கிணறுகளில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, உடைந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சீரமைக்காவிட்டால், அடுத்த மழை காலத்தில் தடுப்பணையில் தண்ணீரைத் தேக்க இயலாமல் போய் விடும். எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.