Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு

போச்சம்பள்ளி, ஜூலை 2: போச்சம்பள்ளி பகுதியில் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை பொய்த்துள்ளதால், வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `போச்சம்பள்ளி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விவசாய பம்பு செட்டுகளை சீராக இயக்க முடியாததால், விளை நிலங்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மகசூல் குறையும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.