Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, அக்.30: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில், மருத்துவமனை வளாகத்தில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகக்குழுவினர், நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி, அவசரகால மருத்துவம், தீவிர சிகிச்சை மருத்துவம் மற்றும் பிசியோதெரபி ஆகிய துறைகளை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய பல்துறை பக்கவாத சிகிச்சை குழுவினரும் பங்கேற்றனர்.

பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பக்கவாதத்தின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பக்கவாத சிகிச்சை மையத்தை அணுகி, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.